Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் 47 மையங்களில் 8,673 மாணவ, மாணவிகள் பிளஸ்2 தேர்வு எழுதுகின்றனர்

அரியலூர், மார்ச் 2: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு : மார்ச் 2026 ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகள் இணைப்பில் கண்டுள்ள கால அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் 9.02.2026 முதல் 14.02.2026 வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு கருத்தியல் தேர்வுகள் 02.03.2026 முதல் தொடங்கி 27.03.2026 முடிவடைகிறது.

10ம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் 23.2.2026 முதல் 28.2.2026 வரை நடைபெற உள்ளது. கருத்தியல் தேர்வுகள் 11.3.2026 முதல் தொடங்கி 2.4.2026 முடிவடைகிறது. அரியலூர் வருவாய் மாவட்டத்தில் இன்று துவங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்டத்தில் மொத்தம் 47 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. 92 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,361 மாணவர்களும், 4,312 மாணவிகளும் ஆக மொத்தம் 8673 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 62 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 171 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் உயர் நிலை பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 5,290 மாணவர்களும், 4,823 மாணவிகளும் ஆக மொத்தம் 10,113 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.