Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் 16 மையங்களில் 3,781 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினர்

பெரம்பலூர், நவ. 2: பெரம்பலூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இதில் 3,781 பேர் தேர்வு எழுதினர். 980 பேர் தேர்வுக்கு வரவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் தொகுதி- II-IIAக்கான முதல் நிலைத் தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்தத் தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 1 தேர்வு மையமும், குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 தேர்வு மையமும், எளம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் பொறியியல் கல்லூரியில் 2 தேர்வு மையங்களும், பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் 2 தேர்வு மையங்களும், பெரம்பலூர் புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 1 தேர்வு மையமும், பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1 தேர்வு மையமும், பெரம்பலூர் பனிமலர் மேல் நிலைப்பள்ளியில் 1 தேர்வு மையமும், பனிமலர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 1 தேர்வு மையமும், சிறுவாச்சூர்  சாரதா மகளிர் கல்லூரியில் 2 தேர்வு மையங்களும், சிறுவாச்சூர்  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1 தேர்வு மையமும், பெரம்பலூர்  ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) 2 தேர்வு மையங்களும், ராமகிருஷ்ணா வித்யா பவன் பள்ளியில் 1 தேர்வு மையம் என மொத்தம் 16 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றன.

இந்தத் தேர்விற்காக வினாத் தாள் மற்றும் விடைத்தாள் உரிய பாதுகாப்புடன் மாவட்ட கருவூலத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வினை எழுத மொத்தம் 4,761 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 3,781 நபர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதினர். மீதமுள்ள 980 நபர்கள் தேர்வெழுத வரவில்லை.

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் அப்துல் ராசிக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு தேவையான குடிநீர், வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் உள்ளதா எனவும், தேர்வு அறைகளில் கண்காணிப்பு பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதையும், தடையில்லா மின்சாரம் வழங்கப் பட்டுள்ளதா? என்பதையும் பார்வையிட்டு, தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றி அமைதியான முறையில் தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பெரம்பலூர் தாசில்தார் பழனிசெல்வன் உடனிருந்தார்.