Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம், ஜூலை 31: ஜெயங்கொண்டம் அருகே வல்லம் கிராமத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை இடையக்குறிச்சி கிராமத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்ட பகுதிகளில் 6 அரசு டாஸ்மாக் கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. மேலும் மாற்று இடம் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வல்லம் கிராமத்தில் மூடப்பட்ட அரசு டாஸ்மாக் கடை தற்பொழுது இடையக்குறிச்சி முதுகுளம் சாலைப் பகுதியில் அமைக்க உள்ளதாகவும் இது குறித்து அரசின் சார்பில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவது குறித்த தகவல் பொதுவெளியில் கசிந்ததை அடுத்து இடையக்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க ஆய்வு நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பொதுமக்கள் தெரிவிக்கையில் வல்லம் கிராமத்தில் பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் இப்பகுதியில் திறக்க மாட்டோம் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இன்று இவ்வாறான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். எனவே இடையக்குறிச்சி கிராமத்தில் கண்டிப்பாக அரசு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . சம்பவ இடத்திற்கு வந்த குவாகம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசு கைவிரிப்பு...

பெரம்பலூர் மாவட்டத்தில் ட்ரோன்களை விவசாயிகள் தனியார் அமைப்புகளைப் போல் வாங்கி வந்து வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிக்கும் நிலையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக விவசாயிகளுக்கு குறைந்த விலையில் ட்ரோன்கள் வாடகைக்குக் கிடைக்க வழி கிடைக்குமா என கேள்வி எழுப்பும் விவசாயிகளுக்கு இன்றுவரை பெரம்பலூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறையிடம் ட்ரோன்களே இல்லையென்ற பதில்தான் கிடைத்துள்ளது. அதேசமயம் கலப்பைகளுடன் கூடிய டிராக்டர், பவர் வீடர், பவர் டில்லர், விசைக் களையெடுப்பான், மரம்நட குழிபோடும் இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் பெரம்பலூர் மாவட்டத்தில் வேளான் பொறியியல் துறையிடம் வாடகைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.