பெரம்பலூர், ஜூன் 29: பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமம் துறையூர் சாலையில் ஓடை அடுத்த சிறுவர்கள் கிணற்றில் குதித்து குளித்து மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து 3 நாள் விடுமுறையொட்டி கிணறுகுலுங்க-மூச்சுமுட்டக் குதித்துக்குளித்த சிறுவர்கள். பொதுவாக கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் ஜூன்- ஜூலை மாதங்களில் அதிக விடுமுறைகள் இருக்காது. இதனால் பள்ளிகள் ஏன் திறக்கப்பட்டது. முதல் எப்போது சனி-ஞாயிறுவரும் என பள்ளி சிறுவர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதுண்டு. விண்ணுலகில் 26ம்தேதி மொகரம் பண்டிகை விடுமுறை என்பதால் 26,27,28 ஆகிய மூன்று தினங்கள் விடுமுறை கிடைத்தது.
இதனால் விடுமுறையில் சிறுவர்கள் பள்ளி மாணவ, மாணவியர் கிணறுகளுக்கு சென்று குளித்து மகிழ்வதற்கு என்பதைவிட குதித்து மகிழ்வதற்காக சென்று பழமணி நேரங்கள் பல்டி அடித்து, நேரம் போவதே தெரியாமல் சிறுவர்கள் நீந்தி விளையாடுவர்கள். இதேபோல் பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் உள்ள சிறுவர்கள் மூன்று நாள் விடுமுறையை பெரம்பலூர் துறையூர் சாலையில் ஓடை அருகே உள்ள தனியார் கிணற்றில் சுற்றுப்பார் அளவுக்கு தண்ணீர் உயர்ந்திருந்த நீர்மட்டத்தில் ஓயாமல் குதித்து குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக நேற்று அதிகளவில் கூடிய சிறுவர்கள் குளித்து நீராடி மகிழ்ந்தனர்.
