Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

அரியலூர்,அக்.28: அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்ட செய்தி குறிப்பு:அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் நவம்பர் 1 அன்று உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தமிழ்நாடு கிராம மேம்பாடு, மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையை தடுத்தல், இழிவு தரும் சாதிப்பெயர்களை மாற்றம் செய்தல், தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் முதலான திட்டங்களின் செயலாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, மேற்காணும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.