Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் தனித்துவ சாதனைகள் புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

அரியலூர், ஜூலை 27: அரியலூர் மாவட்டத்தில் தனித்துவமான சாதனைகள் புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளதாக மாவட்ட கலெக்டர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், அரசுப்பணி, வர்த்தகம், தொழில் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படும் சிறப்பான மற்றும் தனித்துவமான சாதனைகள் அல்லது சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் சிறப்பான பணி ஆற்றியவர்களுக்கு வருகிற 2027 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில், இனம், பதவி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்துத் தரப்பினரும் இவ்விருதுகளைப்பெறத் தகுதியுடையவர்கள். மேலும் விவரங்கள் அறிய அனைத்துப் பிரிவுகளிலும் சாதனை புரிந்தவர்கள்< https://awards.gov.in/ > மற்றும் < https://padmaawards.gov.in/ > என்ற இணையதள முகவரியில் 31.07.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். (இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்), மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்துள்ளார்.