Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 454 மனுக்கள் குவிந்தன

அரியலூர், டிச. 23: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 454 மனுக்கள் பெறப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 454 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறன் பயனாளிக்கு பார்வையற்றோருக்கான கைக்கடிகாரம், மடக்கு ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடியும், 1 மாற்றுத்திறன் நபருக்கு மடக்கு ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடியும், 1 மாற்றுத்திறன் நபருக்கு காதொலி கருவியும், 1 மாற்றுத்திறன் நபருக்கு எல்போ ஊன்றுகோலும் என மொத்தம் ரூ.7,121 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.