Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பாடாலூர் அருகே தண்ணீர் டேங்கர் மீது பைக் மோதி தொழிலாளி பரிதாப பலி

பாடாலூர், ஆக. 21: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை- கொளக்காநத்தம் செல்லும் சாலையோரம் நொண்டி கருப்பு கோயில் அருகே டிராக்டரில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட தண்ணீர் டேங்கர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அயினாபுரத்தை சேர்ந்த தொழிலாளி கருப்பையா(50) பைக்கில் சென்று கொண்டிருந்தார். நொண்டி கருப்பு கோயில் அருகே சென்றபோது கருப்பையாவின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டேங்கர் மீது பைக் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த கருப்பையா அந்த இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கருப்பையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.