பாடாலூர், ஆக. 21: திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா நாகலாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் சரவணன்(25). இவர் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் பிரிவு அருகே பெரம்பலூர்- துறையூர் மாநில நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே சரவணன் பலியானார்.
தகவல் அறிந்ததும் பெரம்பலூர் ஊரக காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



