Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போலீசார் யாரேனும் லஞ்சம் கேட்டால் அரியலூர் ஊழல் ஒழிப்பு தனி பிரிவிற்கு தகவல் தெரிவிக்கலாம்: மாவட்ட காவல்துறை அறிவிப்பு

ஜெயங்கொண்டம், ஆக. 20: அரியலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அரியலூர் மாவட்ட காவல்துறையினரால் பொதுமக்களுக்கு காவல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் அல்லது சட்டவிரோதமாக பணம் கேட்டால், அது தொடர்பாக பொதுமக்கள் தயக்கமின்றி அரியலூர் மாவட்ட காவல்துறையின் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

லஞ்சம் கேட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விவரங்களை நேரடியாக அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் எண் 7904932100 மூலமாகவோ கீழ்கண்ட எண்ணில் தெரிவிக்கலாம். மேற்படி புகார்தாரரின் ரகசியம் பாதுகாக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். லஞ்சம் கொடுக்காதீர்! லஞ்சம் கேட்பதைத் தடுக்க ஒத்துழைப்பு அளிப்பீர்! பொதுமக்கள் தங்களது புகார்களைத் தெரிவித்து, ஊழலற்ற மற்றும் நேர்மையான காவல் சேவையை உறுதி செய்ய அரியலூர் மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.