அரியலூர், ஆக. 20: அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்ட செய்தி குறிப்பு :
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(21ம்தேதி) காலை 10.30 மணியளவில், மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.



