பாடாலூர், ஆக 18: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கொளக்காநத்தம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தின் கீழ் மக்காசோளம் விதைகள் (Advanta 752) தற்போது மானியத்துடன் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ விதை ரூ.409.50 விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அரசு சார்பில் மானியமாக ரூ.100 வழங்கப்படுகிறது.
எனவே விவசாயிகள் ரூ.309.50 மட்டும் செலுத்தி விதையை பெற்று கொள்ளலாம். இதற்கு விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் ஆகியவற்றுடன் ஆலத்தூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் கொளக்காநத்தம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று பெற்று கொள்ளலாம். அப்போது விவசாயிகள் தங்கள் பங்குத் தொகையை பணமாகவும், ஜிபே மற்றும் போன்பே ஆகியவற்றின் மூலம் செலுத்தி, தரமான வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகளை பெற்று கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளும்படி வேளாண்மை விரிவாக்க மையம்அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



