Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஜெயங்கொண்டம் அருகே வீரசோழபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணி: 3 பேருக்கு தலா ரூ.50,000 அபராதம்

ஜெயங்கொண்டம், ஆக.18: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் உட்கோட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரசோழபுரம் பகுதிகளில் நடை ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள முக்கிய இடங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், பொதுமக்களிடம் நட்புறவுடன் செயல்பட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ரோந்து பணி மூலம் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதுடன், பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்ய காவல்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன், காவல்துறை கண்காணிப்பாளர்கள் வேல்முருகன் (ஜெயங்கொண்டம் உட்கோட்டம்), ரவிச்சந்திரன், மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் (ஆயுதப்படை பொறுப்பு) காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.