Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கர்நாடக வனத்துறையை கண்டித்து அரியலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிவிலகல்

அரியலூர், ஆக.18: அப்பாவி தமிழர்கள் 3 பேரை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறையினரை கண்டித்து, அரியலூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநில அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் நீரை திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். செயலர் ராஜா, பொருளாளர் கமலக்கண்ணன், வழக்கறிஞர்கள் பரமேஸ்வரன், விஜயகுமார், அருணன், செல்ல.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.