அரியலூர், செப்.17: மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 118வது பிறந்த நாளையொட்டி, அரியலூரில் உள்ள அவரது சிலைகளுக்கும், படத்துக்கும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரச்செயலர் செந்தில், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் பிரேம்குமார், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கல்லங்குறிச்சி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement
