Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூர் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், செப்.17: அரியலூர் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ரூ.5000 வழங்கிட வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். முத்தரப்பு வாரிய கமிட்டியை உடனே அமைக்க வேண்டும். மாநில நல வாரியங்களின் அதிகாரத்தை பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து பேசினார். சிஐடியு மாவட்ட செயலர் துரைசாமி கோரிக்கை விளக்கவுரையார்றினார். நிர்வாகிகள் சிற்றம்பலம், சேப்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

இளம் பெண்களை ஈர்க்கும் குமார் ஃபேன்சி ஸ்டோர் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் புறங்களை உள்ளடக்கிய மாவட்டத்தின் தலைநகராக விளங்கிவரும் பெரம்பலூர் நகரில், மாடலிங் உலகிற்கு ஏற்ப மங்கையரை மாற்றி அமைக்கும் விதமாக, லட்சக் கணக்கான ஆபரணப் பொருட்களை கனவுலகில் சஞ்சரிக்கும் கற்பனைக்காக, விதவிதமாக விற்பனைக்காக அடுக்கி வைத்திருக்கும் அலங்கார மாளிகையாக பெரம்பலூரில் பழைய பஸ்டாண்டு பகுதியிலும், புது பஸ்டாண்டு பகுதியிலும் குறிப்பிடும்படியாக குமார் ஃபேன்சி ஸ்டோர் விளங்கி வருகிறது.

கன்னியருக்கான காதணி பொருட்கள், நங்கையருக்கான நைல் பாலிஸ்கள், மேனியை மெருகூட்டும் மேக்கப் கிட்ஸ்கள், கூந்தலை கவர்ச்சியாக்கும் அழகு சாதன பொருட்கள், வண்ண வண்ண வளையல்கள், மோதிரங்கள், தோடுகள் ஜிமிக்கிகள், லோலாக்குகள், கண் மைகள், மெஹந்திகள், லிப்ஸ்டிக்குகள், ஃபேசியல் கிரீம்கள், வாசனை திரவியங்கள், பாடி ஸ்பிரே, பெர்ஃப்யூம்கள், டெடி பீர் பொம்மைகள் என பிறந்த குழந்தை முதல் சிறுமிகள், மாணவிகள், குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்களுக்கு தேவையான அனைத்து விதமான ஆடம்பர பேன்சி பொருட்களும் இங்கு விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இவைகள் மட்டுமன்றி சிறுவர் சிறுமியர் விளையாட கூடிய பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள், வீட்டுக்குத் தேவையான உபயோக பொருட்கள் என விற்பனைக்காக அடுக்குமாடி கடைகளில் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடைக்கு வாங்க வரும் பெண்கள் தாங்களாகவே தங்கள் பொருட்களை தேர்வு செய்ய போதுமான இடவசதியுடன் காற்றோட்ட வசதியுடன் கடைகள் அமைந்துள்ளன. விரைவில் பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு தென்புறம் போஸ்ட்ஆபீஸ் தெரு முதல்சந்தில் 3மாடிக் கட்டிடத்தில் குமார் ஃபேன்சி ஸ்டோரின் 3வது கிளை உதயமாகவுள்ளன. நகர்ப்புறங்களில் வசிக்கும் நவ நாகரீக மங்கையருக்கு மட்டுமன்றி, கிராமப்புற மங்கையரையும் நகர்ப்புற மங்கையராக, நளினம் மிக்கவவராக மாற்றிக்காட்டத் தேவையான அழகுசாதனப் பொருட்கள் குவித்து வைத்து நகரிலேயே குறைந்த விலைக்கு தரமான ஃபேன்சி பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

வாடிக்கையாளரை இன்முகத்துடன் வரவேற்று விரும்பியதை வாங்கி மன மகிழ்ச்சியுடன் செல்லத் தக்க வகையில் திகழ்வது குமார் ஃபேன்சி ஸ்டோர்தான் என பெரம்பலூர் மாவட்ட மக்களே சான்றளித்து வருகின்றனர்.