Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கீழப்பழுவூர் அடுத்த அயன்சுத்தமல்லி ஊராட்சி பகுதிகளில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சிய 18 மின் மோட்டார்கள் பறிமுதல்

அரியலூர், ஆக.14: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அடுத்த அயன்சுத்தமல்லி ஊராட்சிப் பகுதிகளில், சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 18 மின்மோட்டார்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. அயன்சுத்தமல்லி கிராம ஊராட்சிகளில், மின்மோட்டார்கள் பொறுத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதாக புகார் வந்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் மிருணாளினி உத்தரவுப்படி நேற்று திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷேக் தாவூத், ஊராட்சி செயலர்கள் செந்தில்குமார், ரமேஷ்குமார், தனவேல், ராஜேந்திரன், முருகேசன், வெங்கடேசன் ஆகியோர் வீடு, கடை மற்றும் தோட்டங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, சட்டவிரோதமாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீர் உறிஞ்சியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து 18 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இது போன்று மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீர் உறிஞ்சியது கண்டுப்பிடிக்கப்பட்டால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். குடிநீர் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். எனவே, இப்பகுதி மக்கள் இனிமேல் மின்மோட்டார்கள் பொருத்தி உறிஞ்சும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.