Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வீறுநடை போட்டு செல்லும் பெண் போலீசார்... மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி ஏலாக்குறிச்சியில் இ.கம்யூ.கட்சி ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஆக.14: அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த ஏலாக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி, மக்களை சந்திக்கும் நடைப்பயண பரப்புரை இயக்கத்தை தொடங்கினர். இந்த நடைப் பயணத்தில், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஜனநாயகத்தை காக்க வாக்கு சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்து, நடைப்பயண பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர் கலியபெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ஜீவா, பரிசுத்தம், ஒன்றிய துணைச்செயலர் பாலன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.