தா.பழூர், ஆக.12: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையிலான காவல்துறையினர் கோவிந்தபுத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிக்கு செல்லும் சாலையில் எதிரே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ய முயற்சி செய்தனர். ஆனால் டிராக்டரை ஓட்டி வந்தவர் சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர், டிராக்டரை சோதனை செய்தபோது அதில் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
+
Advertisement



