Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செந்துறை அருகே நாய்கள் கடித்ததில் ஆண்மான் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம், ஆக.12: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலைக்கடம்பூர் முனியப்பா கோவில் பகுதியில் உள்ள நல்லப்பா ஏரி வயல்வெளியில், சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று வழி தவறி வந்தது. வயல்வெளியில் சுற்றித்திரிந்த மானை அப்பகுதியில் இருந்த நாய்கள் கடித்து குதறியதில், பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, மானை மீட்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த மான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

வயல்வெளி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வழி தவறி வரும் மான்களை பொதுமக்கள் பாதுகாப்பாக கையாள வேண்டும். நாய்கள் துரத்தினாலோ அல்லது காயமடைந்த நிலையிலோ மான்கள் தென்பட்டால், அவற்றை பிடிக்க முயற்சிக்காமல் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்து காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.