ஜெயங்கொண்டம், மே 12: அரியலூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி அறிவுரையின்படி வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு அக்ரி டாக்டர் ராதாகிருஷ்ணன், இசேவை மையத்தில் நடைபெற்ற உழவர் அடையாள அட்டை வழங்கும் முகாமை பார்வையிட்டார். அவருடன் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு ஜென்சி, வேளாண்மை அலுவலர் சிந்துஜா, வேளாண்மை உதவி அலுவலர் வேல்முருகன் ,மற்றும் தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட ஆறு வட்டார பகுதியில் 195 வருவாய் கிராமங்கள், இதில் 120 50 7 நில உரிமையாளர்கள், உள்ளனர். இதில் பி எம் கிஷான் பயனாளிகள் 111547 உள்ளனர்.மாவட்டத்தில் மொத்தம் 949 29 நில உடமை பதிவு செய்யப்பட்டுள்ளது .
மீதம் 25578 நில உரிமையாளர்கள், இதுவரை நில உடமை பதிவேட்டில் பதிவு செய்யவில்லை. உடனடியாக பதிவு செய்யாத விவசாயிகள், தங்கள் வட்டார பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் அவர்களை சந்தித்து தங்கள் நிலத்தின் விவரத்தினை பதிவு செய்ய வேண்டும். நில உடமை பதிவேடு (FR) வேளாண்மை துறை ,தோட்டக்கலைத் துறை ,மற்றும் வேளாண்மையின் சகோதரத்துறைகள் அலுவலர்கள் மூலம் பதிவு செய்யலாம். வேளாண்மை இணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு உழவர் அடையாள அட்டை என்பது விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடையாளம் ஆகும் விவசாயிகள் இத்தகைய உழவர் அடையாள அட்டை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், தங்களின் நிலத்தின் சப் டிவிஷன் மற்றும் சர்வே எண்கள் போதுமானது. உடனடியாக விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள இ சேவை மையம் மூலமாகவும் பதிவு செய்யலாம். நில உடமை பதிவேட்டில் பதிவு செய்த விவசாயிகளில் நிலங்களில் மூலம் மாவட்டத்தில் மொத்த பயிர்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி கணக்கீடு செய்ய இயலும் ,மேலும் பூச்சி நோய் தாக்குதல் விவரம் மற்றும் பயிர் சேதம் கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முடியும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து இடுபொருள்களும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்படும் இடுபொருள்களுக்கு, பயிர் காப்பீடு திட்டம் இயற்கை பேரிடர் நிவாரணத் தொகை மற்றும் விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களுக்கும் விவசாயிகள் கண்டிப்பாக தங்களின் நிலத்தினை நில உடமை பதிவேட்டில் பதிவு செய்து தனித்துவ அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். விவசாயிகள் பல்வேறு வகையில் பயனடையும் அனைத்து திட்டங்கள் திட்டங்களுக்கும் கட்டாயமாக நில உடமை பதிவேட்டில் தங்கள் நிலத்தை பதிவு செய்து தனித்துவ அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு அக்ரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


