Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்

அரியலூர், செப். 8: அரியலூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 608 மனுக்கள் பெறப்பட்டன. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ‘மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலெக்டர் மிருணாளினி, தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 608 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 1, மாற்றுத்திறன் குழந்தைக்கு மூளை இருக்கை நாற்காலி, 1 மாற்றுத்திறன் பயனாளிக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மிருணாளினி, வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.