அரியலூர், செப். 8: அரியலூர் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கள்ளூர், கீழக்கொளத்தூர், திருமானூர், திருப்பெயர், முடிகொண்டான், திருவெங்கனுôர், மஞ்சமேடு, சேனாபதி, தட்டான்சாவடி, கீழக்காவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பரதூர், வண்ணம்புத்தூர், எரக்குடி, வேட்டக்குடி, அயன்சுத்தமல்லி, ஆங்கியனூர், அருங்கால், கோவிலூர், செட்டிகுழி, சின்னப்பட்டாக்காடு, கீழஎசனை, ஏலாக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, பெரியமறை, கரையான்குறிச்சி, அரசன்சேரி, அழகியமணவாளன், மாத்தூர், காமரசவல்லி, குருவாடி, கோமான், தூத்தூர், வைப்பூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என திருமானூர் மின்வாரிய செயற் பொறியாளர் பால்பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


