Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்லூரி முதல்வர் அழைப்பு; கோடை காலத்தில் குறைந்த செலவில் தொழில் நுட்பங்களை பின்பற்றி எள் சாகுபடியில் ஏக்கருக்கு 500 கிலோ மகசூல் பெறலாம்

தா.பழூர், மே 8: அரியலூர் மாவட்டத்தில் எள் சாகுபடியானது ஆடிப் பட்டத்தில் மானாவாரியாகவும், கார்த்திகை மற்றும் கோடைப் பட்டத்தில் நீர்ப்பாசன வசதியுடன் (இறைவை பயிராகவும்) பயிரிடப்படுகிறது. எண்ணெய் வித்து பயிர்களில் குறைந்த செலவில், அதிக பராமரிப்பு இல்லாமல் நல்ல வருமானம் தருவது எள் சாகுபடியாகும். இதற்கு அதிக நீர் தேவையில்லை என்பதோடு, வெப்பத்தைத் தாங்கி வளரும் தன்மையும் கொண்டது. எனவே, கோடைப் பருவத்திற்கு ஏற்ற பயிராக எள் விளங்குகிறது.

சரியான தொழில்நுட்பங்களைக் கையாள்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறலாம். இதில் மண் மற்றும் நிலம் தயாரிப்புஎல்லா மண் வகைகளிலும் எள் வளரும் என்றாலும், வண்டல் மற்றும் செம்மண் கலந்த நிலம் மிகவும் ஏற்றது.நெல் அறுவடை முடிந்த வயல்கள் எள் சாகுபடிக்கு மிகச் சிறந்தது. நல்ல மகசூல் பெற ரகங்கள் கோடைப் பருவத்திற்கு டி.எம்.வி 7 (TMV 7) மற்றும் வி.ஆர்.ஐ (எஸ்.வி) 4 ஆகிய ரகங்கள் ஏற்றவை.

கடைசி உழவின் போது ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். அடி உரமாக ஏக்கருக்கு 30 கிலோ யூரியா, 60 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். மாங்கனீசு சத்துக்குறைபாட்டை நீக்க, 2 கிலோ மாங்கனீசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். விதைப்பு மற்றும் விதை நேர்த்திஏக்கருக்கு 2 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி மற்றும் 200 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

விதைக்கும்போது சீராக விழுவதற்கு, விதையுடன் சம அளவு மணல் கலந்து தூவ வேண்டும். விதைத்த 3-ஆம் நாள் நிலத்தில் ஈரம் இருக்கும்போது, ஏக்கருக்கு பெண்டிமெத்தலின் 38.7 E.C. களைக்கொல்லியை 800 மி.லி அளவு எடுத்து 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.விதைத்த 40 நாட்கள் வரை களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அதிக மகசூலுக்கு வழிவகுக்கும்.பயிர் இடைவெளி மற்றும் கலைத்தல்விதைத்த 15 நாட்களில் செடிக்கு செடி 15 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.

25-ஆம் நாளில் வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு பயிர்களைக் கலைத்து விட வேண்டும். இதனால் செடிகளுக்குக் காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் கிடைத்து அதிக கிளைகளும் பூக்களும் உருவாகும். எள் பயிருக்கு 2 முதல் 3 முறை தண்ணீர் பாய்ச்சுவதே போதுமானது.ஐந்து இலை விடும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவம் ஆகிய நேரங்களில் கட்டாயம் நீர் பாய்ச்ச வேண்டும். வளர்ச்சி ஊக்கிகள் பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும், அதிக பூக்கள் பிடிக்கவும் 40-ஆம் நாளில் ஏக்கருக்கு 100 மி.லி பிளானோபிக்ஸ் (NAA 40 ppm) மற்றும் 1% டி.ஏ.பி (DAP) கரைசலை மாலையில் தெளிக்க வேண்டும். 30 மற்றும் 50-ஆம் நாட்களில் சாலிசிலிக் அமிலம் (500 மி.லி/ஏக்கர்) தெளிப்பதன் மூலம் 20% கூடுதல் மகசூல் பெறலாம்.பயிர் பாதுகாப்பு (பூச்சி மற்றும் நோய் மேலாண்மை) காய் நாவாய் பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மி.லி டைமெத்தோயேட் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.

இதைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் நீருக்கு 10 கிராம் பேசிலஸ் சப்டிலிஸ் அல்லது 2.5 கிராம் கார்பென்டாசிம்/வெட்டபிள் சல்பர் கலந்து தெளிக்க வேண்டும்.ஏக்கருக்கு 1 கிலோ ட்ரைக்கோடெர்மா விரிடியை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து 30-ஆம் நாளில் இட வேண்டும். அறுவடை மற்றும் பின்செய் நேர்த்தி 90 முதல் 120 நாட்களில் அறுவடை செய்யலாம். தண்டுப் பகுதியின் அடிப்பகுதியிலிருந்து 10-வது காயை உடைத்துப் பார்த்தால் கருப்பு அல்லது பழுப்பு நிறமாக மாறியிருந்தால் அதுவே அறுவடைக்குத் தயார் நிலை (வெள்ளை எள்ளுக்கு இது பொருந்தாது).செடிகளை அறுத்து, வட்டமாக அடுக்கி (அம்பாரக் குவியல்) 10-15 நாட்கள் காய வைக்க வேண்டும். இதனால் நுனியில் உள்ள காய்களும் முதிர்ச்சி அடையும்.பின்னர் செடிகளைப் பிரித்து 5 நாட்கள் காய வைத்து, தட்டி எள்ளை எடுத்துத் தூற்றினால் சுத்தமான எள் கிடைக்கும்.

இந்தத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ வரை கூடுதல் மகசூல் பெற முடியும் என சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் வேளாண் விரிவாக்கம் தொழில்நுட்ப வல்லுநர் அ.ராஜ்கலா தெரிவித்துள்ளார்.