அரியலூர், மே 8: கோடை வெயில் கடந்த மார்ச் மாதம் முதலே துவங்கி கொளுத்தி வருகிறது. இதனால் சாலைகளில் நடமாடும் பொது மக்கள் குடை பிடித்தவாறு செல்லும் நிலை இருந்து வருகிறது.திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 முதல் 105 டிகிரி அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அரியலூர் பகுதியில் தினந்தோறும் 98 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.அதிக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஹீட் ஸ்டோக் எனப்படும் வெப்ப வாத நோய் ஏற்படுவதற்கு அறிகுறிகள் இருந்து வருவதால் அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு தமிழக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
