Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் காவலர்கள் தின விழா கொண்டாட்டம்: சான்றிதழ் வழங்கி பாராட்டு

பெரம்பலூர், செப்.7: காவலர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் காவலர் தின விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு 1859- ம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டம் இயற்றப்பட்ட நாளான செப்டம்பர் - 6ம் நாள் காவலர் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையில் சேர்ந்து கடைமையாற்றி பல வீரதீர செயல்கள் புரிந்து உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் லலித்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்கள், ஆயுதப்படை வளாகம், போக்குவரத்து காவல் நிலையம், மற்றும் அனைத்து காவல் அலுவலங்களிலும் காவலர்கள் தங்கள் காவலர் தின உறுதிமொழியை ஏற்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்கள்.  பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் தனது பாராட்டுக்களை தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.