Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் ஆசிரியர் தகுதி தேர்வு: 9 மையங்களில் 2,359 பேர் எழுதினர்

பெரம்பலூர், ஜூலை 6: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 நேற்று நடைபெற்றது. இதில் 2359 பேர் தேர்வு எழுதினர் தேர்வு மையத்தை ஆர்டிஓ அனிதா ஆய்வு செய்தார். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தகுதி தேர்வு டிஆர்பி மூலம் 4மற்றும் 5ம் தேதி இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது இதன்படி நேற்று முன்தினம் 4ம்தேதி தாள் 1 நடைபெற்றது. தாள் 2 பட்டம் முடித்த ஆசிரியர்களுக்கு நேற்று நடைபெற்றது. இதில் தேர்வு எழுத 2454 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 2,359 பேர் தேர்வு எழுதினர். 95 பேர் தேர்வுக்கு வரவில்லை.

இத்தேர்வானது பெரம்பலூரில் 9 மையங்களில் நேற்று நடைபெற்றது பெரம்பலூரில் பனிமலர் மேல்நிலைப் பள்ளியில் முதல் மையத்தில் 296 பேரும், பெரம்பலூர் பனிமலை பனிமலர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாவது மையத்தில் 290 பேரும், பெரம்பலூர்  ராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 289 பேரும், பெரம்பலூர் தந்தை கேன்ஸ் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 249 பேரும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 260 பேரும், பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 260 பேரும், பெரம்பலூர் தோமினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 272 பேரும், பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தில் 270 பேரும், பெரம்பலூர் தந்தை ஹேன்சர் மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடத்தில் 173 பேர் என மொத்தம் 2359 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வுக்கான பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் அமுதவல்லி சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதன்மை கண்காணிப்பாளராக உதவி கண்காணிப்பாளர் துறை அலுவலர் வழித்தட அலுவலர் வினாத்தாள் கட்டு காப்பு அலுவலர் என பெரம்பலூர் மாவட்டத்திற்கு மொத்தம் 250 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு பணியாற்றினர். நேற்று நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை பெரம்பலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அனிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார் அருகில் தாசில்தார் பழனிச்செல்வம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) செல்வகுமார் உடன் இருந்தனர்.

தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.