Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அன்னவாசல் அருகே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

இலுப்பூர்,நவ. 3 : அன்னவாசல் அருகே உள்ள புல்வயலில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அன்னவாசல் அருகே உள்ள புல் வயலில் உள்ளாட்சிகள்தின விழா கிராம சபைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. புல் வயலில் உள்ள மரத்தடியில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் மணிராஜ் வரவேற்றார். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தனிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது,

மேலும் ஊரக பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கல் மூலம் பரவும் டெங்கு காய்சல் குறித்தும், வடகிழக்கு பருமலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தமிழ்நாடு கிராம மேன்பாடு மற்றும் மறு மலர்ச்சி முன்னெடுப்பு குறித்தும், குழந்தை மற்றும் வளர் இளம் பருவதொழிலாளர் முறையை தடுத்தல் குறித்தும் தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் பல்லுயிர் மேலாண்மை குழு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் புல்வயல் அரசு உயர்நிலை பள்ளிக்கு சுற்று சுவர் , கழிவறை வசதிகள், பள்ளி வளாகத்தில் விளக்குகள் மற்றும் குடிநீர் இணைப்பு கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர் செந்தில் முருகன், ஊர் முக்கியஸ்தர்கள் பழனிவேலு, குமரேசன் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.