Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர், நவ. 3: அரியலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மிருணாளினி, தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 446 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் 6.0 திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் சிறந்த முறையில் பராமரித்தும் வரும் 6 அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000, 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.25,000 என 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.75,000 மதிப்பில் திருமண உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலனை மேம்படுத்தும் வகையில் டிசம்பர் 3 உலக நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு (சம்ருதி பவுண்டேசன்) மூலம் நடத்தும் சமூக தரவு கணக்கெடுப்பு முன்களப்பணியாளர் பணிக்கான ஆணைகளையும், பின்னர் 1 மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோலும் கலெக்டர் மிருணாளினி, வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.