Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை மறுக்கும் நீதிபதியின் தீர்ப்பை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூலை 1: பெரம்பலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை மறுக்கும் நீதிபதியின் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாம் மதத்தை தழுவிய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டு காந்தி சிலை முன்பு நேற்று பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் குதரத்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.