Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரியலூரில் திமுக மாணவரணி சார்பில் அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூலை 1: அரியலூரில் தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி, திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அமைச்சர் சரத்குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரி அரியலூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் அரியலூர் அண்ணாசிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழக சட்டதிட்ட திருத்த குழு இணை செயலாளர் சுபா சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போதை கலாச்சார தவெக அரசுக்கு எதிராக 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என கூறி தடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசாரின் தடையை மீறி திமுகவினர், தமிழக வெற்றி கழக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் வலுக்கட்டாயமாக தூக்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றினர். கைது செய்த திமுகவினர் தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராமராஜன், நகர செயலாளர் முருகேசன், கருணாநிதி, இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் அருங்கால் சந்திரசேகர், லதா பாலு மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கழக அணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.