பெங்களூரு:இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் செப். 13, 15, 17 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இடம் பெற்றிருந்த பும்ரா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் உடல்தகுதியை நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என தேர்வுக் குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பும்ரா, வாஷிங்டன், நிதிஷ் குமார் மூவரும் முழு உடல்தகுதியுடன் ஆப்கான் டி20 தொடரில் விளையாடுவதற்கு தயாராகி உள்ளனர். அதே சமயம், பயிற்சி மேற்கொண்டு வந்த வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா மீண்டும் காயம் அடைந்ததை அடுத்து ஆப்கான் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக யஷ் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

