நாமகிரிப்பேட்டை, செப்.29: நாமகிரிப்பேட்டை அடுத்த வேலம்பாளையம் மற்றும் தொப்பம்பட்டி, ஜேடர்பாளையம் போன்ற பகுதிகளில், தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. நேற்று தொப்பம்பட்டி காட்டுக்கொட்டாய், காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராகினி என்பவர், விவசாய வேலைக்காக சென்ற போது, தெருநாய் கடித்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஸ்ரீதரன் என்பவரையும், அந்த நாய் கடித்தது. படுகாயமடைந்த அவர் ஜேடர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள், குமார் என 4 பேரை நாய் கடித்தது. இப்பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக கூட்டமாக சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement


