Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 2: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் டிஆர்ஓ கண்ணன் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் டிஆர்ஓ கண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல்,

இலவச தையல் இயந்திரம் கோருதல், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 411 மனுக்கள் பொது மக்களிடமிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர், மாவட்ட நுகர்பொருள் வழங்கல் துறையின் சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகளை டிஆர்ஓ கண்ணன் வழங்கினார். இந்தக் கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுந்தர்ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வாசுதேவன், தாட்கோ பொது மேலாளர் கவியரசு உள்ளிட்ட அலுவலர்களும், அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Ariyalur-020626-3