Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி எடுக்கும் பணி விறுவிறுப்பு

திருவாரூர், ஜூன் 18: காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து நீர் உரிய முறையில் கிடைத்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் விவசாயிகள் 3 போக நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர். அதன்பின்னர் மேட்டூர் அணையிலிருந்து உரிய நீர் கிடைக்காது மற்றும் பருவமழை பொய்த்துப் போவது போன்ற காரணங்களினால் 3 போகம் என்பது 2 போகமாக மாறி அதன் பின்னர் ஒருபோக சாகுபடியாக மாறியது. இந்நிலையில் கடந்த திமுக தலைமையிலான அரசில் மேட்டூர் அணையானது ஆண்டுதோறும் ஜுன் 12ந் தேதி திறக்கப்பட்டு வந்ததன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலான அளவில் கடந்தாண்டு வரையில் குறுவை மற்றும் சம்பா, தாளடி சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர்.