Friday, March 1, 2024
Home » தொலைநிலையில் பி.எட் படிப்பு விண்ணப்ப பதிவு தொடக்கம்

தொலைநிலையில் பி.எட் படிப்பு விண்ணப்ப பதிவு தொடக்கம்

by Mahaprabhu

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைக் கழகத்தில் நடப்பாண்டில் பி.எட் படிப்பை தொலைதூரத்தில் படிப்பதற்கான விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் டிப்ளமோ படிப்புடன், இளநிலை பட்ட படிப்பையும் முடித்து, பணிபுரியும் ஆசிரியர்கள், இந்த இளநிலை கல்வியியல் பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவத்தை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு திறந்தநிலைக் கழகத்தின் 044-24306657 அல்லது 9976698244 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தமிழ்நாடு திறந்தநிலைக்கழக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

9 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi