ராஞ்சி: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஜார்க்கண்டின் ராஜ்மஹால் தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த விஜய் ஹன்ஸ்டாக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த லோபின் ஹெம்ப்ராம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் லோபின் ஹெம்ப்ராம் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் லோபின் ஹெம்ப்ராம் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலையில், நேற்று பாஜவில் ஐக்கியமானார். ஜார்க்கண்ட் முதல்வர் பதவி பறி போனதால் அதிருப்தியில் இருந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் நேற்று முன்தினம் பாஜவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.