சாம்பார், ரசம், குழம்பு, சட்னி என தக்காளி பொதுவாகச் சமையலறையில் இருக்கும் ஒரு ‘சகலகலா காய்கறி’. அதனை நாம் எந்த உணவில் வேண்டுமானாலும் சேர்த்து சமைக்கலாம். இது உணவின் சுவையினை அதிகரிக்க செய்யும். மேலும் தக்காளியின் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் இவை இல்லாமல் உணவு சமைப்பது என்பது கடினமானது. அதனை நாம் பச்சையாகவோ அல்லது சமைத்தோ எப்படி சாப்பிட்டாலும் அது நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
*காய்கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக்கூடியது தக்காளி. உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் தக்காளியில் மூன்று விதமான புளிப்புகள் அடங்கி இருக்கின்றன. அவை ஆப்பிள் பழத்தில் இருக்கும் போலிக் அமிலம், எலுமிச்சை, சாத்துக்குடி, நார்த்தை முதலியவற்றில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மற்றும் ஃபாஸ்போரிக் அமிலம் நிறைந்துள்ளது.
*தக்காளிப்பழம் பலவீனம், சோம்பல் ஆகியவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.
*மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப்பதார்த்தங்களைவிடத் தக்காளியில் அதிக அளவு மக்னீசியம் இருக்கிறது. இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவையும் நிறைந்துள்ளது.
*தக்காளிப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை சிறப்பாகவும் கூர்மை கொண்டதாகவும் இருக்கும். ரத்தம் சுத்தமாகும்.
*ஒரு டம்ளர் தக்காளிச்சாற்றுடன் சிறிதளவு தேன், இரண்டு பேரிச்சம்பழம் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு அருமையான சத்துணவு கிடைக்கும்.
*தக்காளியிலுள்ள இரும்புச்சத்து ரத்தத்தால் உடனே உறிஞ்சப்படுவதால் ரத்த சோகை விரைவில் குணமாகிறது.
*நூறு கிராம் தக்காளிப்பழத்திலிருந்து கிட்டும் கலோரி 20 தான் என்பதால் அதை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. காலையில் இரண்டு தக்காளிப்பழங்களை மட்டுமே சாப்பிட்டால்கூட உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் கிடைக்கும்.
*நன்கு பழுத்த தக்காளியில் நோய்களைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளது.