Sunday, February 25, 2024
Home » பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!

பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!

by Francis

சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வருகிற 9ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார். பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக பேருந்து சேவை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அனைத்து ஊழியர்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் நிலையில், யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை.

வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையும், போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

fourteen + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi