சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் (Advanced Technology) கொண்ட புதிய உதவி உபகரணங்கள் வழங்க ஏதுவாக, புதிய உபகரணங்களை காட்சிப்படுத்தி, அவ்வுபகரணங்களின் செயல்பாடு குறித்து மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வுப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மூலம் ஆய்வு செய்யவும், தகுதியான உபகரணங்களைத் தேர்வு செய்யவும் ஏதுவாக, புதிய உபகரணங்களுக்கான கண்காட்சி 12.6.2025 மற்றும் 13.6.2025 ஆகிய நாட்களில், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.