சென்ைன: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் லட்சுமி நேற்று அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய் உள்ளிட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உதவித்தொகை பெறும் அனைத்து பயனாளிகளின் தரவுகளை தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலமாக சரிபார்க்கப்பட்டு இறந்த பயனாளிகளை கண்டறிந்து மாவட்டங்களில் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு அவர்களது பராமரிப்பு உதவித்தொகையை நிறுத்தம் செய்து, தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இனி வரும் காலங்களில் பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து அவர்களின் வாழ்நாள் சான்றிதழை பெற வேண்டாம்.