சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு கூட்டம் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மூன்றாண்டுக்கு ஒருமுறை மாநில நிர்வாகிகள் மறு சீரமைக்கப்பட்டு, புதிய மாநில தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 துணை பொதுச்செயலாளர்கள், மாநில தகவல் தொடர்பு செயலாளர், மகளிர் அணி செயலாளர், 2 துணை செயலாளர்கள், மாநில பொதுக்குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொடர்பு அலுவலர்கள் (மாற்றுத்திறனாளிகள் அல்லாத நல்ல நிலையில் உள்ளவர்கள்) உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர். இதனால், கூட்டத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்று புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை வழங்கலாம்.