சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட புதிய உதவி உபகரணங்கள் வழங்க ஏதுவாக, புதிய உபகரணங்களுக்கான கண்காட்சி 12.6.2025 (நாளை) மற்றும் 13.6.2025 ஆகிய நாட்களில் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன உபகரண கண்காட்சி
0