காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பஸ் பயணச் சலுகை பழைய அட்டை வைத்திருப்போர் வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை பயணம் செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கும் (ம) அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை 2024-2025 (31.03.2025 வரை) என உள்ள பழைய அட்டை வைத்திருப்பவர்கள், 30.09.2025 வரை மேலும் நீட்டித்து மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம் காஞ்சிபுரம் முகவரி மற்றும் 044-29998040 என்ற எண்ணை தொடர்புகொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பஸ் பயணச்சலுகை நீட்டிப்பு
0