சென்னை: தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் என கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியால் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனுமதியின்றி முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமனை செப்டம்பர் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.