சென்னை: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் சங்குமணி கடந்த 2023 நவம்பர் 14ம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த 30ம் தேதி ஓய்வு பெற்றார். புதிய மருத்துவக் கல்வி இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் டாக்டர் தேரணிராஜனுக்கு அப்பொறுப்பு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று காலம் முதல் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் தேரணிராஜன், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி ஓய்வு தேரணிராஜனுக்கு கூடுதல் பொறுப்பு
0