சென்னை: தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனராக எஸ்.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வருகிறது. தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடம் மற்றும் இதர கட்டுமான செயல்பாடுகளில், பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் பயனடைய ஒன்றிய மற்றும் மாநில தொழிலாளர் சட்டங்களுடன் தமிழ்நாடு மாநில விதிகளையும் அமல்படுத்தும் துறையாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரை புதிதாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநராக எஸ்.ஆனந்த் நியமிக்கப்படுகிறார். இவர் தொழிலாளர் மற்றும் திறன் மே்பாட்டு துறை, அரசாணையின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு அரசின் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.