Thursday, February 22, 2024
Home » தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் பதவிக்கு தகுதியானவர்களை 6 வாரத்தில் நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் பதவிக்கு தகுதியானவர்களை 6 வாரத்தில் நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Mahaprabhu

சென்னை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் பதவிக்கு தகுதியானவரை 6 வாரத்தில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குனராக கடந்த 2020-ம் ஆண்டு செந்தில்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரை விட சீனியரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் ராஜசேகரன், இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மாநில அளவில் மூத்த அதிகாரி உள்ள என்னை விட பணி மூப்பு பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள செந்தில் குமார் இயக்குனராக நியமித்தது தவறு.

நான் உள்பட 3 பேர் அவரை விட மூத்தவர்கள் உள்ளோம். உள்நோக்கத்துடன் நடைபெற்றுள்ள இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பார்த்திபன், செந்தில்குமாரை இயக்குனராக நியமித்தது தவறு. அந்த நியமனம் சட்டப்படி இல்லை. அதனால், அவரை இயக்குனராக நியமித்த உத்தரவை ரத்து செய்கிறேன். விதிமுறைகளை பின்பற்றி சீனியார்டி பட்டியலை தயாரித்து, தகுந்த அதிகாரியை இயக்குனராக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து செந்தில்குமார் மேல்முறையீடு செய்தார்.

அரசும் மேல்முறையீடு செய்தது.இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சிங்காரவேலன், வக்கீல் வி.ரவிக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவில் தலையிட முகாந்திரம் எதுவும் இல்லை என்று கூறி செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், ‘‘பதவி உயர்வு விதிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு அரசு 6 வாரத்துக்குள் புதிய இயக்குனரை தேர்வு செய்து நியமிக்க வேண்டும்’’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

You may also like

Leave a Comment

18 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi