சென்னை: இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் காலமானார். திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். ராகேஷ் பால் உடலுக்கு, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.