மதுரை: மதுரையில் ஆதி திராவிடர் மாணவ, மாணவியர்களின் விடுதிகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர், மதுரை ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் ஆதி திராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளில் இரவு நேர காவலர்களை நியமிக்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 5 மாணவியர் விடுதிகளிலும் இரவுக் காவலர்கள் இல்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை!!
0